Sinhala (Sri Lanka)English (United Kingdom)

News and Events
Location of the Office
சேவை மையங்கள்
செய்தி மற்றும் நிகழ்வுகள்

Users online
எங்களிடம் 49 விருந்தினர்கள் இணைப்பு நிலையில்
முகப்பு எங்களைப் பற்றி கண்ணோட்டம்

கண்ணோட்டம்

 

பார்வை

காலி மாவட்டத்தின் பொதுமக்களுக்குத் தரமான சேவையினைப் பெற்றுக் கொடுத்தல்​


எங்கள் நோக்கம்

திறமைவாய்ந்த மனித வளங்களையோகித்து​ மாவட்ட மட்டத்தில் உயர்ந்த நிர்வாக முறையினால் அதிசிறந்த அரச சேவையினை உறுதிப்படுத்தல்.

 

வடக்கில் களுத்துற, இரத்தினபுரி மாவட்டத்தினாலும் கிழக்கில் மாத்தறை மாவட்டத்தினாலும் மேற்கில் இந்து சமுத்திரத்தினாலும் அமைந்துள்ள  பிரதேசத்திற்கு  காலி நிருவாக மாவட்டம் உரித்துடையதாகும். பெந்தோட்டை தொடக்கம் கொவியாபான வரை 73 கிலோமீற்றர் நீளமுள்ள கடற்கரை பிரதேசமும் இதற்கு உரித்துடையதாகும்.

 

காலி மாவட்டத்தின்  நிலப்பகுதியைப் பார்க்கும் போது கூடுதலான இடங்கள் ஈரத்தன்மை கொண்டதுடன் நாட்டின் உட்பகுதியில் மலைகள் அமைந்துள்ளது. ஹினிதுமை மலை.  திப்பொடுவான மலை, கபரகல மலை. கொன்தகல கெகிரஹேன, வாடிஹேன படகல ஆகியனவும் இம் மலைகளினுடையதாகும்.

 

காலி மாவட்டத்தின் நிலப்பகுதி பிராக் கேம்பிரிய காலத்திற்கு உரித்தான பாசானத்தினால் கட்டப்பட்டதாகும். சிவப்பு மஞ்சள் பொடிசொலிக்  பாசானம் மாவட்டத்தில் கூடுதலாகக் காணப்படுகிறது. மேலும் அரிதான பாசானமாக சந்திரகான்தி இரசாயனம் அம்பலாங்கொடை செயலகப் பிரதேரசத்தில் மீட்டியாகொடை பிரதேசத்தில் காணப்படுகிறது. கடற்கரைபிரதேச நிலப்பகுதியை அவதானிக்கும் போது க​டொலான மூலிகையிலான வயல் நிலப்பகுதி காணப்படுகிறது.  இயற்கையிலே  அபூர்வமான படைப்பாக ஹிக்கடுவை கொரல்பர நாட்டுக்கு மட்டுமல்லாமல் வெளிநாடுகளிலும் பிரசித்தம்​​ பெற்றுள்ளது. இது உல்லாசப் பிர​தேசமாக நாட்டின் அபிவிருத்திக்காக விஷேசமாக பங்களிப்புச் செய்கின்றது. இது மாவட்டத்தில் 1651.6 கிலோமீற்றர் பரப்பளவைக்​​ கொண்டதாகும். அதில் 1635.6 கிலோமீற்றர் நிலப்பரப்பளவைக்​​ கொண்ட ​​​தோடு 16 கிலோமீற்றர்  உள்ளக நீர்ப்பகுதியாகும்.

 

பருவக்காற்று (மோசம்) ம​​ழையினால் போதியளவு ம​ழை இப்பிரதேசத்திற்குக் கிடைப்பதோடு ​மே மாதம் தொடக்கம் செப்படம்பர் மாதம் வரை அதிக மழை கிடைக்கின்றது. வருடாந்தம் 80-160 அங்குலம் மழைவீழ்ச்சியும் 75F வெப்பமும் கொண்டதாகும். பிர​தேசத்தினூடாக பாய்ந்து செல்லும் கஙகையும் சிங்கராஜ வனத்தில் ​​தொடங்கி கிந்​தோட்​டை பிரதேசத்தில் கடலுடன் கலக்கின்றது. மேலும் பெங்கங்கை, மாது கங்கை, கொக்கல ஓய பிரதேசத்தில் காணப்படும் சிறிய ஆறுகளாகும். இதன் காரணமாக           பகுதியிக்கு அதிக ​வெப்பம், அதிக மழை சுழற்சியாகக் கி​டைக்கின்றது. பெரிய வனாத்திரத்திற்கு உரித்தான உலக பிரசித்தி பெற்ற சர்வதேசத்தில் ஏற்றுக்கொண்ட சிங்கராஜ வனத்தின் ஒரு பகுதி காலி நிருவாக மாவட்டத்திற்கு உரித்தானதாகும்.

 

 

முக்கிய இடமான இராமன் இராவண ஆட்சி காலத்தின் சாட்சியான றூமஸ்ஸல ம​லை இலங்கைக்கு அடிமையான விஜித காலத்தினை பிரதிபலிக்குமுகமாக முழு பிரதேசத்திற்கும் பரந்து காணப்படும் கம்பீரமாகத் தோற்றமலிக்கும் காலிக் கோட்டை, கடவுளின் புண்ணிய பூமியாகக் கருதும் சீனிகம மற்றும் வெள்ளதேவால  புண்ணிய பூமி பௌத்த முக்கிய இடமாக கருதுவதோடு யடகல பராகொட புனித பூமியும் இப்பிரதேசத்திலேயே அமைந்துள்ளது.

 

இலங்கையின் தேசிய வருமானமானத்திற்கு காலி மாவட்டம் வருமானத்தைப் பெற்றுக் கொடுக்கின்றது. அதாவது விவசாயக் கைத்தொழில் மற்றும் உல்லாசப் பயணம் மூலம் பெற்றுக் கொடுக்கின்றது. விவசாயத்துறையில் நெல், தேயிலை, இறப்பர், தென்னை, கருவா போன்றவை பிரதான இடத்தை வகிக்கின்றது. அதேபோல் பெந்தோட்டை, உனவடுன, ஹிக்கடுவை, கொக்கல ஆகிய கடலோரப் பிரதேசங்கள் உல்லாசத் துறை  சம்பந்தமான விஷேட பிரதேசங்களாகும்.

 

காலி நகரத்தின்  10 கி.மீ. தூரத்தில் கொக்கல வர்த்தக வலயம் அமைந்துள்ளதோடு இதில் பலபேருக்கு தொழில் வாய்ப்பும் பெற்றுக்கொடுக்கப்பட்டுள்ளது.